Tamil Nadu urban local body polls: மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை

tamil-nadu-urban-local-body-polls-row-over-hijab-disrupts-voting-at-polling-booth-in-madurai
ஹிஜாப் சர்ச்சை

தமிழகம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு(Tamil Nadu urban local body poll) இன்று (19.2.2022) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் அமைதியாக தங்கள் வாக்கை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், மதுரை மேலூரில் உள்ள 8வது வார்டு அல்அமீன் பள்ளி வாக்கு சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு தேர்தல் அலுவலர்கள், மற்ற கட்சிகளின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்து பராபரப்பை கிளப்பினார். இதனால் பாஜக ஏஜென்ட் வெளியேற்றப்பட்டார். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பாஜகவின் மாற்று ஏஜென்ட் வந்ததும் மீண்டும் தொடங்கியது.

Tamil Nadu urban local body polls: Row over hijab disrupts voting at polling booth in Madurai

இதையும் படிங்க: BA.2 subvariant of Omicron : ஓமிக்ரானின் BA.2 துணை மாறுபாடு பரவல்

இதையும் படிங்க: TN Urban Local Body Polls 2022 : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்