Karur: வாக்களர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்கள்(mobile phones), டோக்கன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்கள் மற்றும் வேட்பாளர் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த டோக்கன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற போலீஸார், வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி, அவர் வீட்டிலிருந்த 27 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அதிமுக வேட்பாளர் சரவணன் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களும் கைப்பற்றப்பட்டது. அதில் விவோ நிறுவனத்தின் வி-23 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனின் மாடல் எண் அச்சிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
karur police arrested admk cadres on the election day
இதையும் படிங்க: Tamil Nadu urban local body polls: மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை



