weather report tn : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

weather report tn : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியீட்ட செய்தி குறிப்பில் ,கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரையிலும் தென் தமிழக மாவட்டங்களிலும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.weather report tn

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

மக்களின் அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல்.பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை என்றால் நம் அன்றாட வாழ்வு மிக கடினம் என்ற நிலைமையில் உள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101 .41ஆக விற்பனையானது.இன்று மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனையாகிறது . நேற்று டீசல் லிட்டருக்கு ரூபாய் 91 .43 விற்பனை செய்யப்பட்டது. இன்று மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதையும் படிங்க : ஆக்கிரமிப்பை காக்க காலி மனைகளில் வீடு கட்ட யோசனை கூறும் பஞ்., தலைவர்!

இதையும் படிங்க :BA.2 subvariant of Omicron : ஓமிக்ரானின் BA.2 துணை மாறுபாடு பரவல்

இதையும் படிங்க : TN Urban Local Body Polls 2022 : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

(tamilnadu weather forecast today )