சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலில் இன்று கேரள ரயில்வே போலீசாரும் ,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது எஸ்1 கோச்சில் பயணித்த மதுரையை சேர்ந்த சதீஸ்குமார்,ராஜீவ் காந்தி, தியாகராஜன் ஆகியோரிடம் நிறைய பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 22 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் நடத்திய விசாரணையில் செங்கணூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு செல்வதாக மட்டுமே தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்து புனலுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூவரையும் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்



