கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை பொறியியல் படிப்பிற்கு – உத்தரவு நிறுத்திவைப்பு !

இந்த கல்வியாண்டு முதல் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களை படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்கிற அறிவிப்பு வெளியானது.

அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிதாக நேற்று வெளியிட்டது.இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த பாடங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் பலர் விமர்சனங்கள் கூறிவந்தனர்.தற்போது இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.