கல்விக் கடன் தள்ளுபடி – திமுக அறிவிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் ,திமுக தனது தேர்தல் அறிக்கையில் 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் திமுக வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகளை இடம் பெற்றுள்ளன.மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், வட்டியில்லா கடன என பல்வேறு அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

மேலும் கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.