கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க 7 பேர் கொண்ட குழு !

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடைபெற்றது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கத் தனியாகக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு தங்களுடைய அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 11-ம்தேதிக்குள் ஆன்லைன் வகுப்பிற்கான வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக பதிவுச் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்லைன் வகுப்புகள் மீதான புகார்கள் அளிக்க கல்லூரிகளில் தனியாக புகார் பிரிவு உருவாக்கப்படவேண்டும்.

இந்த புகார் குழுவில் மருத்துவர், கல்வியாளர், மனநல நிபுணர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கவேண்டும்.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் dresscode பின்பற்றி இருக்க வேண்டும்.