பொய்யான பாலியல் வன்கொடுமை புகாரால் இளைஞருக்கு சிறை

இளைஞர் மீது பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்து சிறையில் தள்ளியதற்காக, இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று பெண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த புகாரின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், 95 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷ்’க்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே சந்தோஷ்’க்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்தது.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என டி.என்.ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார்.