இன்றைய தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை 4740 இருந்தது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூபாய் 37,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 38,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூபாய் 4760 விற்பனை செய்யப்படுகின்றது.