நானி – நஸ்ரியா நடிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பு வெளியீடு

தெலுங்கில் நானி – நஸ்ரியா நடிப்பில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் நானியின் 28ஆவது படமாகும். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்படம் அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு நஸ்ரியா தனது கணவரும் நடிகருமான ஃபகத் பாசிலின் ‘ட்ரான்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நானி 28’ படத்தின் மூலம் நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகிறார்.