மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!!!

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துக் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. அதன்படி, இந்தாண்டு மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களிலும், 92 பல் மருத்துவ இடங்களிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.