Corona virus: அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா

அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா
அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா

Corona virus: ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,198 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் 986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 8,659 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரபடுத்தியுள்ளது.

இதனிடையே, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சரும், ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முத்துசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: crime news : மது போதையில் நடந்த விபரீதம் !