Ration shop: ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்..!

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு
ரேஷன் கடை

Ration shop: இந்தியாவிலேயே பொருட்கள் மிகவும் நியாயமான விலைக்கு விற்கப்படும் இடமாக காணப்படுவது நியாயவிலைக் கடைகள் தான். அதிலும் குறிப்பாக தமிழகம் எந்த ஒரு மாநில அரசும் செய்யாத வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்து பயோமெட்ரிக் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ரேஷன் பொருட்கள் கள்ளச் சந்தைகளுக்கு சென்று விற்பனை ஆவது தடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரேஷன் கடைகளில் ஆங்காங்கே கைரேகை பதிவு இயந்திரங்களில் பல தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்காமலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் QR-ஸ்கேனர் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை மையத்தில் பதிவு செய்தும் பொருள்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் வட்டார அளவில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது குறித்து பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Corona virus: அமைச்சர் முத்துசாமிக்கு கரோனா