தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா நடக்காதா?

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்நிலையில் +2 மாணவர்களுக்கு கட்டாயம் என்று தமிழக கல்வியமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் கரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில்,சிபிஎஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இன்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளார்.

14417 என்கிற உதவி எண்ணிலும், [email protected] என்கிற ஈமெயில் முகவரியிலும் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களை பதிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.