ரவுடி பிக்சர்ஸின் ராக்கி திரைப்படம் ஓடிடி யில் வெளியாகிறதா ?

அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி.இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாது. மேலும் அந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.இந்நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர் ஏ ஸ்டுடியோ தயாரித்திருந்த ‘ராக்கி’ படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. இது குறித்து நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.