நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு

கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்டாக், சலூன், பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள இந்த மாவட்டங்களில் மாநகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

50 சதவீதம் சதவீதம் பேருந்துகளை மட்டுமே இயக்கப்பட உள்ளதால் போக்குவரத்து கழகங்கள் ஆயுத்தமாகி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.