தமிழக தேர்தல் 2021 தேதி மட்டும் கட்டுப்பாடுகள் விபரம் !

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியது ,தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக காலம் வரும் மே மற்றும் ஜுன் மாதங்களுடன் நிறைவடைகிறது. இந்த 5 மாநிலங்களில் மட்டும் 18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்களிக்க வசதியாக , 88 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழக தேர்தல் செலவின பார்வையாளராக மதுமாஜன் மற்றும பாலகிருஷ்ணா ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை.

தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே ஒரு வேட்பாளர் செலவு செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளர் உள்பட 2 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்ய அனுமதி. பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விபரம் :

தேர்தல் தேதி – ஏப்ரல் 6
வேட்பு மனு தாக்கல் – மார்ச் 12
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 19
பரிசீலனை – மார்ச் 20
வேட்பு மனு வாபஸ் – மார்ச் 22
வாக்கு எண்ணிக்கை – மே 2