தமிழகத்தில் 9 ,10 மற்றும் 11 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிப்பு-முதல்வர் பழனிச்சாமி !

கரோனா தோற்றால் உலகம் முடங்கும் நிலை ஏற்பட்டது.மேலும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் அரசு லாக்டவுன் அறிவித்ததால் பள்ளி ,கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன.இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது.

மேலும் இந்த ஆண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி பள்ளி வகுப்புகள் தொடங்கின.9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் 8 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கின.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 -வது விதியின் கீழ் 9 ,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.இந்த செய்தி அறிந்த 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டாசு வெடித்து மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர்.