விவசாயம் செழிக்க தனி பட்ஜெட்..!

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.

தமிழக அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பாகத் தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.