கவனம் தேவை..அதிகரிக்க தொடங்கும் கொரோனா எச்சரிக்கும் ஒன்றிய அரசு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளன.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா நெறிமுறைகளை சரியாக பின்பற்றியதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது.

இந்நிலையில்,தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் சில இடங்களில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்த பட்டு வருகின்றன.60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45-60 வயது பிரிவினருக்கு தடுப்பூசி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.