ஏடிஎம்களில் பணம் எடுக்கப்போகிறீர்களா.. இன்று முதல் கட்டண உயர்வு அமல் !

ஏடிஎம் சென்டர்கள் வந்த பிறகு யாரும் பணம் எடுக்க வங்கிகளுக்கு செல்வதில்லை.தேவைப்படும் போதெல்லாம் ஏடிஎம் சென்டர்கள் சென்று பணம் எடுத்து வந்தனர்.மேலும் அதில் பண பரிவர்த்தனைகள் போன்றவைகளும் அதிகம் நடைபெற்று வந்தன.

ஏடிஎம்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதனைப் பராமரிக்கும் செலவும் வங்கிகளுக்கு அதிகம் ஆகியுள்ளது.இதற்காக வங்கிகள் சேவைக் கட்டணமாக வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொள்கிறார்கள்.

2019ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளில் சேவைக் கட்டணத்தை அதிகப்படுத்த முடிவெடுத்தது. தற்போது இன்று முதல் புதிய பரிவர்த்தனை கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.உங்கள் கணக்கு இல்லாத வேறு வங்கி ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூபாய் 15 லிருந்து 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் ரூபாய் 5 லிருந்து 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களிலிருந்து மாதந்தோறும் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். அந்தக் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக இனி பிடித்தம் செய்யப்படும்.