வசூலில் சாதனை செய்த மாஸ்டர் திரைப்படம் !

மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்திருந்தார்.50 சதவீத இருக்கைகளுடன் வெளீயான மாஸ்டர் திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வசூல் வேட்டையை இரண்டே நாட்களில் நடத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் வெற்றிகரமாக ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படம் வெளியாகி மூன்றே நாட்கள் ஆன நிலையில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.