கோவா சுற்றுலா செல்லும் பொது கோர விபத்துக்கு உள்ளான தோழிகள் – தார்வாடு !

கர்நாடக மாநிலம் தார்வாடு அருகே நடந்த கோரா விபத்தில் சுற்றுலா சென்றுகொண்டிருந்த தோழிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்காலத்திருந்தயே தோழிகளான மருத்துவர் வீணா மற்றும் ப்ரீத்தி ரவிக்குமார்.மேலும் இவர்களுடன் படித்த 15 பேர் வெவ்வேறு ஊர்களில் நல்ல பணியில் இருந்துவருகிறார்கள்.

இவர்களது வயது 35 முதல் 40 இருக்கலாம்.வருடம் ஒரு முறை விடுமுறை நாட்களில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம்.தற்போது சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு அனைவரும் கோவா செல்ல முடிவெடுத்துள்ளனர்.

எனவே அனைவரும் டெம்போ ட்ராவல்லர் சென்றுகொண்டிருந்த போது காலை 7 மணியளவில் ஹூப்ளி நகரை தாண்டி தார்வாடு நகரை நோக்கி செல்லும் போது எதிர் பக்கத்தில் அதிவேகமாக டிப்பர் லார்ரி நிலை தடுமாறி இவர்கள் வந்த டெம்போ ட்ராவல்லர் மீது மோதியது.இந்த விபத்தில் மருத்துவர் வீணா உட்பட 12 தோழிகள் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.

டிப்பர் லார்ரி ஓட்டுனரும் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.மேலும் காயம் பட்ட சில பேர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.