கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறகணிப்பு

தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளம் செயல்படுகிறது. ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சூட்டை கிளப்பி உள்ளது.

பொதுமக்கள் பலரும் உடனடியாக தமிழ் மொழியை கோவின் தளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.