தைவானில் பயங்கர ரயில் விபத்து !

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது.

இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் பயணிகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகிறது.