பொலிவிழந்த முகத்திற்கு முட்டை பேஸ்பேக் !

முட்டையில் நிறைய நன்மைகள் இருக்கிறது.இதை உணவாகவும் உட்கொள்ளலாம் மற்றும் சருமத்திற்கு வெளியிலும் பேஸ்பேக் போன்றும் பயன்படுத்தி நமது சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம்.

முட்டை வைட்டமின் ஏ, வைட்டமின் டி வைட்டமின் ஈ, வைட்டமின் பி 12, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி 2 உள்ளடக்கியுள்ளது.முகத்தில் குறிப்பாக மூக்கின் நுனியில் வெள்ளையான அல்லது கருப்பான புள்ளிகள் இருக்கும்.

இதை போக்க முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கி அதை மூக்கில் நன்றாக மசாஜ் செய்தபடி தேய்க்கவும். பிறகு மிதமான வெந்நீரில் முகத்தை கழுவி வர வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் அம்மை தழும்புகள் இருக்கும் இடம் அல்லது முகம் முழுக்க கூட தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை உலரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

முட்டையின் வெள்ளைகருவில் பாசிப்பயறு மாவை கலந்து நன்றாக பேஸ்ட் பொல் குழைத்து முகத்தில் முடி இருக்கும் பகுதியில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து அவை நன்றாக உலர்ந்ததும் அதை காட்டன் துணியால் முடி வளர்ச்சிக்கு எதிர்திசையில் துடைத்தால் முடிகள் உதிரும். இப்படி செய்து வர நாளடைவில் முடி வளர்ச்சி குறையும்.