நடிகர் மாதவன் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று !

நடிகர் மாதவன் தான் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதையடுத்து வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது அவருடைய குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் ட்ரைலருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இப்போது சொந்த நோக்கத்தில் பேசுகிறேன்.

ஆனால் நேற்று மாலை 5 மணியளவில் அந்த கொடூரனின் கைகளில் சிக்கிக் கொண்டோம். ஆம், என்னுடைய குடும்ப நபர்கள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நேற்று எல்லாரையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தேன் என்று தெரிவித்தார்.