மசினகுடி வனத்தில் பிடிபட்டது T23 புலி !

நீலகிரி மாவட்டத்தில் 4 பேரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலி, 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இன்று பிடிபட்டது.தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது

13 வயதுடையை இந்த T 23 புலி. அந்தப் புலி மசினகுடியில் கெளரி என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு தாக்கி கொன்றது.

மேலும் இந்த புலி நிறைய கால்நடைகளையும் கொன்றுள்ளது.இந்த புலியின் அச்சுறுத்தல் காரணமாக புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அதனை பிடிக்க கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் மீண்டும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். தற்போது மசினகுடியில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இடத்தில் டி 23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

இதையும் படிங்க : பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி குறைப்பு