பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி குறைப்பு

கொரோனா காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

அதேசமயம் ஒருபக்கம் விலைவாசி உயர்வும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பண்டிகை காலம் என்பதாலும் தொடர் மழை காரணமாக விளைச்சல் வரத்து குறைவாக உள்ளதாலும் ,காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை விஷம் போல் ஏறி கொண்டே செல்கிறது.

அன்றாடம் சமையலுக்கு தேவையான எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் எண்ணெய் வகைகளின் உயர்வும் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்துள்ளது.

கச்சா, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் அடிப்படை இறக்குமதி வரிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரி குறைப்பு இன்று முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது.