அலோபதி மருத்துவம் பற்றி பாபா ராம்தேவின் கருத்து !

பாபா ராம்தேவ் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவும் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுகிறார் என்று அவர் மீது வழக்குகள் பதிவாகின.உச்ச நீதிமன்றம் உண்மையில் ராம்தேவ் என்ன பேசினார் என்பது குறித்து இன்று ஆய்வு செய்ய உள்ளது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்க்கக் கோரி டெல்லியில் உள்ள இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

பாபா ராம்தேவ் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழக்கு, ஐபிசி பிரிவு 188, பிரிவு 269, பிரிவு 504 ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி மாற்ற வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பாபா ராம்தேவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.