8 வழிச் சாலைக்கு எதிரான வழக்கு

சேலம் சென்னை 8 வழிச்சாலையைத் தொடரவும், அந்த திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தவும் சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் அகற்றிவிட்டது.

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞர் சூர்யபிரகாசம், பி.வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.யுவராஜ், ஆர். செளந்தர்ராஜன் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.