டெல்லி வந்தார் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்து சேர்ந்தார். மேலும் ஏற்கெனவே, திருச்சியில் தமது வீட்டில் இருந்து டெல்லி செல்வதற்கு புறப்பட முயன்றபோது இரண்டு முறை அய்யாக்கண்ணு போலீசாரால் தடுக்கப்பட்டார்.

அத்துடன், திருச்சியில் அய்யாக்கண்ணு வீட்டின் முன்பு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர் எங்கே செல்ல விரும்பினாலும், அவரை தம் வாகனத்தில் வரும்படி போலீசார் நிர்பந்திப்பதாகவும் அய்யாக்கண்ணு புகார் கூறினார்.