‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் கெட் அப்புடன் இருக்கும் ரஜினி புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.