வெயிலின் தாக்கம் இனி ஆரம்பமாகப்போகிறது !

ஏப்ரல் 2ம் தேதி முதல் மேலும் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுவது, 30ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மேலும் ஏப்ரல் 2ம் தேதி தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம்.

மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும்.