விபத்தில் பாஜக தலைவர்கள் நான்கு பேர் பலி – திரிபுரா !

திரிபுராவில் உள்ள செல்லாகுங் எனும் பகுதியில் ஒரு மேக்சி டிரக்கில், மாநிலத்தில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மற்ற தொண்டர்களுடன் வீடு திரும்பும்போது, திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மூன்று பெண்கள் உட்பட நான்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் பலியாகினர்.

பலத்த காயம் அடைந்த 8 பாஜக தொண்டர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது தொடர்பான ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.