உத்தர்கண்டில் திடீர் வெள்ளப்பெருக்கால் மக்கள் மாயம் !

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ரெய்னி கிராமத்தில் இருந்து மின் நிலையம் அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. மேலும் தெளளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி நீர்மட்டம் அளவு உயர்ந்துள்ளது.இதனால் ரிஷிகங்கா அணை உடைந்தது.

இந்நிலையில் ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன மற்றும் அவை பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த விபத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகாண்ட் விரைந்துள்ளனர்.