பொடுகை நீக்கும் அரோமா எண்ணெய்கள் !

பெண்கள் மட்டும் அல்லது ஆண்களுக்கும் தலைமுடியில் வரும் பொடுகு பெரும் தொல்லையாக இருக்கிறது.இப்போது இதற்கென்று சில அரோமா எண்ணெய்கள் இருக்கிறது.இதை முறையாக பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.

லெமன் க்ராஸ் ஆயில் கொண்டு வாரம் ஒரு முறை மசாஜ் செய்வதால் பொடுகு தொல்லைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.இதன் நறுமணம் மிக அருமையாக இருக்கும்.மேலும் இது தடவுவதன் மூலம் தலைவலி சரியாகும்.இதை தடவின பிறகு நல்ல தூக்கம் வரும்.

சிடார்வுட் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் தலையில் உள்ள அரிப்பு, உச்சந்தலை சூட்டை குறைக்கவும் உதவும். இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புக்கு நல்ல தேர்வாகும். மேலும் தூங்க செல்லும் முன்பு சிறிது சிடார்வுட் எண்ணையை முகர்ந்த பின்பு தூங்க சென்றால் நல்ல தூக்கம் வரும்.