நடிகர் விஜய் நடிப்பிலும் மற்றும் தன்னுடைய ஆடல் திறமையினாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை நடிகர் விஜய் சந்தித்தார்.சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த நடிகர் விஜய் அவரை காண ஏராளமான ரசிகர்கள் பனையூரில் வீட்டின் முன்பு குவிந்தனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் மற்றும் ரசிகர்களும் புகைப்படம் எடுத்து வருகின்றனர். தற்போது காரில் விஜய் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர்.



