டெல்லியில் போராடும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக நிதியுதவி – அமெரிக்க கால்பந்து வீரர் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இந்த போராட்டதிற்கு பல பிரபலங்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க கால்பந்து லீக் வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் ரூ.7.28 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜூஜூ ஸ்மித் சூஸ்டர், உயிர்களைக் காப்பதற்காக, இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மருத்துச் செலவுக்கு ரூ. 7.28 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளேன்.

இதன்மூலம் எந்தவொரு உயிர் இழப்பையும் நாம் தடுக்க முடியும் என எண்ணுகிறேன் என்று கூறி விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.