நீட் தேர்வால் மீண்டும் ஒரு சோகம்..மாணவன் தற்கொலை !

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

நாடு முழுதும் நடைபெறும் இந்த தேர்வு 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.தற்போது மேட்டூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இவர் மருத்துவம் படிக்கச் வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.ஏற்கனவே மருத்துவர் கனவில் 2 முறை நீட் தேர்வு எழுதி உள்ளார். ஆனால் இரண்டு தேர்விலும் தோல்வி.

தற்போது மூன்றாவது முறையாக இந்த வருடம் எழுத இருந்தார்.ஆனால் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.இந்த செய்தி தற்போது அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.