கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கைகள் குறைந்து வருகிறது.
மேலும் தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி.தமிழக அரசும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில்,இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த முகாம்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.
மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.இந்த தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நாம் கொரோனாவின் 3 ம் அலையில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.



