சிவகார்த்திகேயனின் டான் படத்தின் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் சிவகார்த்திகேயன் ஒருவர்.மேலும் இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயதிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.தன் விடாமுயற்சியால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரை வந்தவர்.

தற்போது சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.மேலும் இதில் பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி,எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி போன்ற நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது என்று தெரியவந்துள்ளது.இந்த படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பால் திரையரங்குகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் வெளியாக தயாராக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயன் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.