
பங்குச்சந்தை என்பது நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை பல மடங்காகப் பெருக வைக்கும் அட்சய பாத்திரம் ஆகும். ஆனால் சரியான வகையில் முதலீடு செய்வதற்கான யுக்திகளை அறிந்தவர்கள் மட்டுமே பங்கு சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். அதிர்ஷ்டம் உள்ளவர்களை பங்குசந்தை குபேரனாக்கிவிடும். முன்யோசனையின்றி செயல்படுபவர்களையும், அவசரக்காரர்களையும், பேராசை பிடித்தவர்களையும் பங்குசந்தை ஆண்டியாக்கிவிடும்.
பங்குச் சந்தையின் போக்கை முன்கூட்டியே கணிக்க முடியாத (unpredictable) தன்மை உள்ளதால் இதில் முதலீடு செய்வதில் தீர்மானமான முடிவு எடுப்பது கஷ்டமானது. பங்குச் சந்தையில் ஈடுபடுவது குழந்தைதனமான விளையாட்டு போன்றது அல்ல. எதுவும் அறியாமல் இதில் ஈடுபட்டால் நஷ்டம் தான் ஏற்படும்.
பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு டிரேடிங் பற்றிய ஆழ்ந்த அறிவும், புரிதலும் இருக்க வேண்டும். பங்குச்சந்தை பற்றிய சமீபத்திய செய்திகளைப் படித்து தினமும் update செய்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தை பற்றிய இன்றைய நிலவரத்தை நமக்கு தெளிவாக அறிவிக்க, இலவச ஆலோசனைகள் தர பல இணையதளங்கள் உள்ளன.