ஈஷாவில் கொண்டாடிய மாட்டுப் பொங்கல் விழா !

பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் வருவது மாட்டு பொங்கல்.தமிழகம்
முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பாக மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

அந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினர்.அங்கு வளர்க்கப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இதில் பேசிய சத்குரு, இவ்விழா விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தப்பட்டது. அதேபோல உணவுக்கும், உணவுக்கு மூலமான மண்ணுக்கு, நீருக்கு, விலங்குகளுக்கு எல்லாம் சம்மந்தபட்டது. அதனால் இதை உயிர்களின் விழா என்று சொல்ல முடியும். மேலும் இவ்விழா குறிப்பிட்ட கடவுள் அல்லது மதம் சார்ந்த விழா அல்ல.

மேலும் , சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளோம். இதற்காக 7000 யோகா ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். இந்தப் பயிற்சியின் மூலம் உடலில் தெம்பும் மனதில் தெளிவும் ஏற்படும். குறிப்பாக தமிழக இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.