முகத்தில் முடி இருக்கா இனி கவலை வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க !

பொதுவாக பெண்களுக்கு தங்கள் முகம் பார்க்க பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.ஆனால் சிலருக்கு முகத்தில் முடிகள் இருக்கும்.இதற்கு காரணம் ஹோர்மோன் பிரச்சனையாகவும் இருக்கலாம்.இதற்கு மருத்துவரை அணுகும் முன்பு இதை ட்ரை பண்ணி பாருங்கள்.

முதலில் குப்பைமேனி இலை மற்றும் விரலி மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவு தூங்கும் முன்பு முகத்தில் தடவ வேண்டும்.காலை எழுந்த உடன் முகம் கழுவ வேண்டும்.

வாரம் ஒரு முறை சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தடவிவர முடிகள் உதிர்ந்துவிடும்,நாளடைவில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் பார்க்கலாம்.

கடலை மாவு,பாசிப்பயிறு மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள் பொடியை கலந்து குளிக்க போகும் முன்பு முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்து வர நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.