அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது !

சங்ககாலத்திருந்து ஆண்களின் வீரத்தை பறைசாற்ற காளைகளை அடக்கும் போட்டி வைத்தனர்.தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் நடந்து வருகிறது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பீரோ, கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகமாக 12 காளைகளை தழுவிய கண்ணன் என்ற வீரருக்க முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.