ஏழு மாதங்களுக்கு பிறகு பட்டையை கிளப்பும் சென்செக்ஸ்,நிஃப்டி

நேற்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 600.87 புள்ளிகள் (1.54 விழுக்காடு) உயர்ந்து 39,574.57 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.05 புள்ளிகள் (1.38 விழுக்காடு) உயர்ந்து 11,662.40 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகள் 8.35 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா அண்ட் மகிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பைனாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, லார்சன் அண்ட் டர்போ, சன் பார்மா, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

இதனை தொடர்ந்து இன்று தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் t நிஃப்டி சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இது ஏழு மாதங்களுக்கு பிறகு ஏற்பட்ட உயர்வு எனவும் பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.