ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு வைத்த செக் !

கரோனா தொற்றின் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது.ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி அளித்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் பிறகு, தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையில் மேற்பார்வையிட உத்தரவு பிறப்பித்துள்ளது.