கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு !

கரோனா தொற்று இந்தியா முழுவதும் பரவி வருகிறது.நாளுக்கு நாள் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும் பல இடங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி விலை மத்திய அரசுக்கு ரூ.150க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு, பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சீரம் நிறுவனம் தலைவர் அதார் பூனவாலா தடுப்பூசியின் விலையை மாற்றி அறிவித்துள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கான விலை ரூ.400ல் இருந்து ரூ.300 ஆக குறைக்கப்படுகிறது.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் மிச்சப்படுத்தப்படுவதுடன், ஏராளமானோருக்கு தடுப்பூசி கிடைக்க உதவும் என அவர் கூறி உள்ளார்.