பொதுவாக ஒருவரது நினைவாக சிலைகள் வைப்பார்கள்.இதில் இடம் பெறுவோர் அரசியல் வாதிகள் ,பெரும் தலைவர்கள் மற்றும் சமூக போராளிகள்.இந்நிலையில் அலகாபாத் ராணுவ மையத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்பவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி, லடாக் எல்லை பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலுார் ராணுவ ஹவில்தார் பழனி வீர மரணமடைந்தார். இதனால் இரு நாட்டுக்கு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அங்குள்ள ராணுவ மையத்தில் ஒரு கட்டிடத்துக்கு ‘ஹவில்தார் வீர் கே.பழனி அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.பழனி சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் மட்டுமின்றி பீரங்கி இயக்குவதில் வல்லவர் என்று தெரியவந்துள்ளது.